கோடீஸ்வர தொழிலதிபரை அடிமையாக மாற்றிய திருநங்கை சாமியார்.... நேர்ந்த விபரீதம்... பகீர் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருநங்கை சாமியார் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரின் கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

கீழ்கட்டளையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரான பழனிசாமி நேற்றுமுன்தினம் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் அவரின் காரில் சடலமாக கிடந்தார்.

இந்த கொலை தொடர்பாக இருவர் பொலிசில் சரணடைந்த நிலையில் திருநங்கை சாமியார் ரஞ்சித்குமாரிடம் வேலை செய்ததாக கூறினர்.

இருவர் அளித்த வாக்குமூலத்தில் ரஞ்சித்குமார் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருநங்கை ரஞ்சித்குமார் பில்லி, சூனியம் என்ற பெயரில் பலரை அச்சுறுத்தி நில அபகரிப்பில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆன்மீகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட பழனிசாமியிடம் அறிமுகமான ரஞ்சித்குமார் ஒரு கட்டத்தில் பழனிசாமியை தனது ஆன்மீக அடிமையாகவே மாற்றியுள்ளார்.

பணம் படைத்த பழனிசாமியை பயன்படுத்தி தனது ஆன்மீக பீடத்தை பெரிய அளவில் விரிவாக்க எண்ணிய ரஞ்சித்குமார், அவரை பல வகைகளில் ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பெற்றார்.

ஒரு கட்டத்தில் ரஞ்சித்குமாரின் போலி முகம் தெரியவரவே ஆத்திரத்தில் தாம் கொடுத்த பணத்தை கேட்டு பழனிசாமி வற்புறுத்தி வந்துள்ளார்.

இதையடுத்து பழனிசாமியை ரஞ்சித்குமார் தனது வீட்டில் வைத்து கொலை செய்து சடலத்தை அவர் காரில் வைத்தது தெரியவந்துள்ளது.

மதுரையை பூர்விகமாக கொண்ட ரஞ்சித் குமாரைத் தேடி பொலிசார் அங்கு சென்றுள்ள நிலையில் அவர் கூட்டாளியான ராஜேஷை தற்போது கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்