குடும்பமே ஒன்று சேர்ந்து இளைஞரை வெட்டிக்கொலை செய்த கொடூரம்: வெளியான காரணம்!

Report Print Vijay Amburore in இந்தியா

ஈரோடு மாவட்டத்தில் 1800 ரூபாய்க்காக ஒரு குடும்பமே சேர்ந்து இளைஞரை வெட்டிக்கொலை செய்துள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (32). இவருக்கு இந்துமதி என்கிற மனைவி இருக்கிறார். இந்துமதி தன்னுடைய தாய் ராசத்தியுடன் சேர்ந்து வீட்டின் முன்பு இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார்.

டிரைவராக பணிபுரிந்து வரும் செந்தில்குமார், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த சின்னராஜ்(50) என்பவருக்கு கடனாக ரூ.1800 கொடுத்துள்ளார்.

சில நாட்கள் கழித்து அந்த பணத்தை திரும்ப கேட்கும் போது, சின்னராஜ் பணத்தை தர மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் சின்னராஜ் தன்னுடைய மனைவி பழனியம்மாள் (45), மகள் ரம்யா (22), மருமகன் பால்ராஜ் (25) ஆகியயோருடன் செந்தில்குமாரின் வீட்டிற்கு சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த சின்னராஜ் திடீரென கத்தியை எடுத்து செந்தில்குமாரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த செந்தில்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். மேலும் செந்தில்குமாரின் மனைவி மற்றும் மாமியாரை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதற்கிடையில் கதறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தலைமறைவாகியுள்ள சின்னராஜ் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...