இளம் மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டில் விட்டு அலுவலகம் சென்ற கணவன்... திரும்பி வந்தபோது காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் இளம் பெண் தன்னுடைய இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்த நிலையில் தாய் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

பெங்களூரில் வசித்து வருபவர் குமரேசன். இவர் மனைவி மீனா. தம்பதிக்கு சரண், சுகுனா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்னர் குமரேசன் வேலைக்கு சென்றுவிட்டார். இதன்பின்னர் 10லிருந்து 1 மணிக்குள் மீனா உணவில் விஷம் கலந்து தனது பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் அதை சாப்பிட்டுள்ளார்.

இதையடுத்து மூவரும் மயங்கி கிடந்தனர். இந்நிலையில் அலுவலகத்திலிருந்து மதிய சாப்பாடு சாப்பிடுவதற்காக குமரேசன் வீட்டுக்கு வந்த போது மூவரும் வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கிய நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மீனாவும், சுகுனாவும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

சரணுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் குமரேசனும், மீனாவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.

மீனாவின் இம்முடிவு குறித்து குடும்பத்தார் யாரும் சந்தேகம் எதுவும் எழுப்பவில்லை. பொலிசார் தொடர்ந்து இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers