பிழைப்பு தேடி சென்னை வந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி! 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பிழைப்பு தேடி வந்த இளம் பெண்ணை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி அமைந்துள்ள பனையூர் கெனால் சாலையில் கட்டுமான பணிகள் நடந்து வருவதால், இங்கு பல பகுதிகளில் இருந்து வந்து மக்கள் வேலை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த பசுபதி (25), மாரியப்பன் (22) மற்றும் 23 வயது பெண் ஆகிய 3 பேர் தங்கி அங்கு கட்டிட வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 27-ஆம் திகதி வேலை முடிந்த பின் மூன்று பேரும் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது, திடீரென்று 3 பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த 2 வாலிபர்களின் கழுத்தில் கத்தியை வைத்துவிட்டு, சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டி, அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர், அவர்களிடம் இருந்து 4 செல்போன், 10 ஆயிரம் பணம் மற்றும் அந்த பெண் அணிந்து இருந்த வெள்ளி கொலுசு ஆகியவற்றை பறித்துக்கொண்டு, நடந்ததை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி சென்றுள்ளனர்.

இதையடுத்து அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் பசுபதி புகார் அளித்ததன் பேரில், இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது திருவான்மியூரை சேர்ந்த கணேசன் (24), பாலாஜி (22), மணிகண்டன் (22), மோகனகிருஷ்ணன் (22), ஆனந்தன் (26) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேர் தான் இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து 6 பேரையும் கைது செய்த பொலிசார், அவர்களை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 பேரை புழல் சிறையிலும், 17 வயது சிறுவனை கெல்லீஸ் சீர்திருத்தப்பள்ளியிலும் சேர்த்தனர்.

அவர்களிடமிருந்து 4 செல்போன், 6 ஆயிரம் பணம், வெள்ளி கொலுசு, 2 கத்தி, 3 பைக் ஆகியவற்றையும் பொலிசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...