ஒரே நேரத்தில் 15 திருநங்கைகளுக்கு நடந்த திருமணம்... பின்னணி என்ன? வைரலாகும் புகைப்படங்கள்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் 15 திருநங்கைகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்திஷ்கர் மாநிலத்தின் ராய்பூரில் உள்ள திருநங்கை சமூகத்தினர் தான் இந்த திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

அதன்படி 15 திருநங்கைகள், 15 ஆண்களை சனிக்கிழமையன்று ஒரே இடத்தில் திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்துக்கு முந்தைய நாள் ஆடலும், பாடலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சத்திஷ்கர், குஜராத், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த திருநங்கைகளுக்கு திருமணம் நடைபெற்றது.

இது குறித்து திருநங்கையும், மேயருமான மது கினர் என்பவர் கூறுகையில், திருநங்கைகள் அனுபவிக்கும் துன்பங்களை யாரும் புரிந்து கொள்வதில்லை.

தற்போது அரசாங்கம் அறிவித்துள்ள திட்டத்தால் எங்கள் சமூகத்தினருக்கு திருமணம் நடந்தது மகிழ்ச்சியளிக்கிறது என கூறினார்.

கடந்த 2014-ல் உச்சநீதிமன்றம் திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினத்தவர்கள் என அங்கீகாரம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...