வைரலான ஸ்டாலின் வீடியோ: நடிகை ராதிகா கண்டனம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது நடிகைகள் கேவலம் என கருத்து தெரிவித்த மு.க. ஸ்டாலினுக்கு, நடிகை ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் போது, பிரதமர் மோடியை தாக்கி பேசிய ஸ்டாலின், எங்களை சந்திது பேசுங்கள் என தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து 100 நாட்கள் போராட்டம் நடத்தினர்.

ஆனால், அவர் அழைத்து பேசவில்லை. பெரும்பணக்காரர்கள், தொழிலதிபர்கள், நடிகர்களை அழைத்துப் பேசினார். 'கேவலம்' நடிகைகளை அழைத்துப் பேசினார்’ என்று நடிகைகளை கேவலம் என்று அழுத்தம் கொடுத்துப் பேசினார்.

இவர் இந்த பேசிய இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து நடிகை ராதிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர், ஸ்டாலின், நடிகைகள் குறித்த உங்களின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது. உங்கள் குடும்பத்துடன் பல ஆண்டுகளாக நல்லுறவை நாங்கள் கொண்டுள்ளோம். உங்கள் தந்தையை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளோம். உங்கள் குடும்பத்தையும், உங்களையும் தாழ்த்தி விடாதீர்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers