4 வாரிசுகளுக்கு போட்டியிட வாய்ப்பு: வெளியானது அதிமுக பட்டியல்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக தற்போது வெளியிட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு இனி 33 நாட்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் அனைத்தும் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன.

இந்த முறை அதிமுக- பாமக- பாஜக- தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கின்றன.

பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும், புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவை போக மீதமுள்ள 20 இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது. இந்த நிலையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அதிமுக அறிவித்துள்ளது.

இதில் அதிமுக சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், பொள்ளாச்சி, ஆரணி, திருவண்ணாமலை, சிதம்பரம் (தனி), பெரம்பலூர், தேனி, மதுரை, நீலகிரி (தனி), திருநெல்வேலி, நாகப்பட்டனம் (தனி), மயிலாடுதுறை, திருவள்ளூர் (தனி), காஞ்சிபுரம் (தனி), தென் சென்னை ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது.

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்:

  1. சேலம்- சரவணன்
  2. நாமக்கல்- காளியப்பன்
  3. கிருஷ்ணகிரி- கேபி முனுசாமி
  4. ஈரோடு- ஜி மணிமாறன்
  5. கரூர்- தம்பிதுரை
  6. திருப்பூர்- எம்எஸ்எம் ஆனந்தன்
  7. பொள்ளாச்சி- மகேந்திரன்
  8. ஆரணி- செஞ்சி ஏழுமலை
  9. திருவண்ணாமலை- அக்ரி கிருஷ்ணமூர்த்தி
  10. சிதம்பரம் (தனி)- சந்திரசேகர்
  11. பெரம்பலூர்- என் ஆர் சிவபதி
  12. தேனி- ரவீந்திரநாத்
  13. மதுரை- ராஜ் சத்யன்
  14. நீலகிரி (தனி)- தியாகராஜன்
  15. திருநெல்வேலி- மனோஜ் பாண்டியன்
  16. நாகப்பட்டினம் (தனி)- தாழை சரவணன்
  17. மயிலாடுதுறை- ஆசைமணி
  18. திருவள்ளூர் (தனி)- வேணுகோபால்
  19. காஞ்சிபுரம் (தனி)- மரகதம் குமரவேல்
  20. தென் சென்னை- ஜெயவர்த்தன்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்