கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் (63) கணைய புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்தார்.

இந்நிலையில், மனோகர் பாரிக்கரின் உடல்நிலை இன்று மோசமடைந்தது. இதனால் பாஜக மூத்த தலைவர்கள் கோவா விரைந்தனர்.

இந்நிலையில் இன்று இரவு 8 மணியளவில் மனோகர் பாரிக்கர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்