நாடாளுமன்ற தேர்தல்..தினகரனை பார்த்து பயந்து ஓடும் அதிமுக-திமுக! என்ன காரணம்?

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலால் அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் நிலையில், மதுரை மண்டலத்தில் தினகரனைப் பார்த்து திமுகவும், அதிமுகவும் பயப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 18-ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட அடுத்த நொடியே அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன.

யாரு யாருக்கு எந்த எந்த தொகுதி என்ற பேச்சுவார்த்தையும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

இந்நிலையில் மதுரை மண்டலத்தில் தினகரனைப் பார்த்து மிகப் பெரிய கட்சிகளான அதிமுகவும், திமுகவும் பயப்படுவதாக கூறப்படுகிறது.

மதுரை மண்டலம் என்பது, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய லோக்சபா தொகுதிகளை உள்ளடக்கியது.

இவை அனைத்திலும் கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இதன்பிறகு, 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும், இந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பெருவாரியான சட்டசபை தொகுதிகளில் அதிமுகதான் வென்றது.

இப்படி அதிமுகவின் கோட்டையாக மதுரை இருக்கும் நிலையில் தான், திமுகவும், அதிமுகவும் மதுரை மண்டலத்தில் பெருவாரியான தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்குதான் வாரி வழங்கியுள்ளன.

இதற்கு முக்கியமான காரணம், இங்கு தினகரன் ஆதிக்கம் இருப்பதுதான் என்கிறார்கள்.

அதிமுக பெருவாரியான செல்வாக்கை கொண்டுள்ள மதுரை மண்டலத்தில், இப்போது அதிமுகவின் முகமாக டிடிவி தினகரன் தான் அங்கிருக்கும் மக்களால் பார்க்கப்படுகின்றார்.

திமுக, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை ஆகிய 5 தொகுதிகளையும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது, .

திண்டுக்கல்லில் திமுக களமிறங்குகிறது. அதேநேரம், திண்டுக்கல்லை பாமகவிடம் கொடுத்துள்ள அதிமுக, பதிலாக தேனியில் களம் காண்கிறது.

அதேநேரம், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளை பாஜகவுக்கும், விருதுநகர் தொகுதியை தேமுதிகவுக்கும் ஒதுக்கீடு செய்துள்ளது அதிமுக.

மதுரையில் அதிமுக களமிறங்குகிறது. இதனால் அதிமுகவின் கோட்டையான மதுரை மண்டலத்தில், வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது

எப்படியும், பெருவாரியான வாக்குகளை தினகரன் கட்சி வாங்கிவிடும் என்ற அச்சத்தால், இரு பெரும் திராவிட கட்சிகளுமே, தங்கள் கூட்டணி கட்சிகளை இங்கே பலிகடாவாக களமிறக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்