மக்களவை தேர்தலுக்கான கூட்டணி தொகுதி பட்டியலை வெளியிட்டது அதிமுக!

Report Print Vijay Amburore in இந்தியா

மக்களவை தேர்தலானது 7 கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது வருகின்ற ஏப்ரல் 18ம் திகதியன்று நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன.

மக்களவை தேர்தல் நடைபெறும்பொழுதே தமிழகத்தல் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் ஆளும் அதிமுக அரசு மக்களைவை தேர்தலில் தங்களுடைய கூட்டணி கட்சிகள் போட்டியிடவுள்ள தொகுதிகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன் விவரங்கள் பின்வருமாறு:

மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 20 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள், பாஜக-வுக்கு 5, தேமுதிக-வுக்கு 4 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமாகா, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என்ஆர் காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதிகள் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை துணைமுதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் இன்று அறிவித்தார்.

அதன்படி அதிமுக போட்டியிடும் தொகுதிகள் விவரம்:

சேலம், நாமக்கல், கிருஷண்கிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், பொள்ளாச்சி, ஆரணி, திருவண்ணாமலை, சிதம்பரம், பெரம்பலூர், தேனி, மதுரை, நீலகிரி, திருநெல்வேலி, நாகை, மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை தெற்கு.

பாமக போட்டியிடும் தொகுதிகள்:

தர்மபுரி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர்

பா.ஜனதா போட்டியிடும் தொகுதிகள்:

கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை, ராமநாதபுரம், தூத்துக்குடி

தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்:-

கள்ளக்குறிச்சி, திருச்சி, சென்னை வடக்கு, விருதுநகர்.

என்ஆர் காங்கிரஸ் புதுச்சேரியிலும், தமாக தஞ்சாவூரிலும், புதியநீதிக்கட்சி வேலூரிலும், புதியதமிழகம் தென்காசியிலும் போட்டியிடுகின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்