நாடாளுமன்ற தேர்தலுக்கான 20 திமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு!

Report Print Kabilan in இந்தியா

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தி.மு.க தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டு 7 கட்டங்களாக நடக்க உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன.

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய ஒன்பது கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளை தி.மு.க ஒதுக்கியுள்ளது. மீதமுள்ள 20 தொகுதிகளில் தி.மு.க போட்டியிட உள்ளது. இந்நிலையில், தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார்.

இந்நிலையில் தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க கூட்டணியில் 10யில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். வி.சி.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா இரண்டு இடங்களில் போட்டியிடும். ம.தி.மு.க, ஐ.யூ.எம்.எல், ஐ.ஜே.கே, கொங்கு நாடு மக்கள் கட்சி தலா ஒரு இடங்களில் போட்டியிடும்.

மீதமுள்ள 20 இடங்களில் தி.மு.க போட்டியிடும். இவற்றில் தி.மு.க போட்டியிடும் தொகுதிகள் சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, காஞ்சிபுரம்(தனி), அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளகுறிச்சி, நீலகிரி(தனி), பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, தூத்துக்குடி, தென்காசி(தனி), திருநெல்வேலி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் தி.மு.க போட்டியிடும்.

இந்தப் பட்டியலை வெளியிடும் முன் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னாள் முதல்வர் அண்ணா மற்றும் தி.மு.க முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதி நினைவிடத்தில் வேட்பளார் பட்டியலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தி.மு.க சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 20 வேட்பாளர்களின் பட்டியல்

 • சென்னை வடக்கு - டாக்டர்.கலாநிதி வீராசாமி
 • சென்னை தெற்கு - தமிழச்சி தங்கபாண்டியன்
 • மத்திய சென்னை - தயாநிதி மாறன்
 • காஞ்சிபுரம்(தனி) - ஜி.செல்வம்
 • அரக்கோணம் - எஸ்.ஜெகத்ரட்சகன்
 • வேலூர் - கதிர் ஆனந்த்
 • தருமபுரி - டாக்டர்.எஸ்.செந்தில்குமார்
 • திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை
 • சேலம் - எஸ்.ஆர்.பார்த்தீபன்
 • கள்ளகுறிச்சி - கவுதம சிகாமணி
 • நீலகிரி(தனி) - ஆ.ராசா
 • பொள்ளாச்சி - கு.சண்முகசுந்தரம்
 • திண்டுக்கல் - ப.வேலுச்சாமி
 • கடலூர் - கதிரவன்
 • தஞ்சாவூர் - எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்
 • மயிலாடுதுறை - சே.ராமலிங்கம்
 • தூத்துக்குடி - கனிமொழி.எம்.பி
 • தென்காசி(தனி) - தனுஷ்குமார்
 • திருநெல்வேலி - சா.ஞானதிரவியம்
 • ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்