ராகுலுக்கு எதிராக முன்னாள் நடிகையை களம் இறக்கும் பாஜக…!

Report Print Abisha in இந்தியா
182Shares

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக முன்னாள் நடிகையும், இன்னாள் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இராணியை பாஜக களம் இறக்க உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதி அமேதி. இந்தத்தொகுதியில் கடந்த முறை ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் டி.வி. நடிகையும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இராணிதான் போட்டியிட்டார். கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு ஸ்மிருதி இராணி கடும் போட்டியை ராகுல் காந்திக்கு அளித்தார்.

ராகுல் காந்தி 4 லட்சம் வாக்குகளைப் பெற்ற வெற்றி பெற்ற நிலையில், ஸ்மிருதி 3 லட்சம் வாக்குகளைப் பெற்றார். தோல்வியடைந்தாலும் பாஜகவால் மாநிலங்களவை உறுப்பினராகப்பட்டு மத்திய அமைச்சரானார் ஸ்மிருதி.

இந்நிலையில் வரும் நாடாளுமன்றத்தேர்தலிலும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே அவருக்கு எதிராக மீண்டும் ஸ்மிருதி இராணியை பாஜக களம் இறக்கும் என்று அக்கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின்,கிழக்குப் பகுதியில்தான் அமேதி உள்ளது. கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் பிரியங்காவை ராகுல் களமிறகுவதாக காங்கிரஸ் திட்டமிட்டுள்ள நிலையில், இருவருக்கும் போட்டி அளிக்கக்கூடிய பலமான வேட்பாளராக ஸ்மிருதி இருப்பார் என்பது பாஜகவுடைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்