பொள்ளாச்சி கொடூர சம்பவத்தில் திருநாவுக்கரசுக்கு 4 நாள் சிபிசிஐடி காவல்!

Report Print Vijay Amburore in இந்தியா

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு 4 நாள் சிபிசிஐடி காவல் விதித்து நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.

பொள்ளாச்சியில் 100க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்புறுத்தல் செய்து வீடியோவாக மிரட்டிய வழக்கில் திருநாவுக்கரசர் உட்பட 4 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தியும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் எதிரொலியாக வழக்கு சிபிசிஐடிக்கு சென்றது. நேற்று முதல் விசாரணையை ஆரம்பித்த சிபிசிஐடி அதிகாரிகள் முதற்கட்டமாக திருநாவுக்கரசு வீட்டில் சோதனை மேற்கொண்டு, பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்ட இடத்தை உறுதி செய்தனர்.

இதனையடுத்து திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சிபிசிஐடி பொலிஸார் கோவை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு விசாரணைக்கு விசாரணைக்கு வரவிருப்பதை அறிந்த ஏரளாமான பொதுமக்கள் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்தனர். திருநாவுக்கரசர் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் வீடியோ கான்பிரசிங் மூலம் விசாரணை நடைபெற்றது.

10 நாட்கள் காவலில் எடுக்க பொலிஸார் கோரிக்கை விடுத்த நிலையில், 4 நாட்கள் அனுமதி கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers