நாடாளுமன்ற தேர்தல்: இராணுவ வீரர்கள் ஓட்டு யாருக்கு…?

Report Print Abisha in இந்தியா

இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தலில் இராணுவ வீரர்களின் ஓட்டு யாருக்காக இருக்கும் என்ற ஒரு கேள்வி அனைவருக்கும் இருக்கிறது.

வலுவான பாஜக,கடந்த மக்களவை தேர்தலைப் போலவே, வரும் மக்களவை தேர்தலிலும், பாஜக, மற்றும் காங்கிஸ் கட்சிகளிடையே ஐந்து தொகுதிகளில் நேரடி மோதல் இருக்கும்.

அதில், தெஹ்ரி கர்வால், அல்மோரா, நைனிடால், ஹரித்வார், போரி கர்வால் ஆகியவை உள்ளடங்கும். இந்த ஐந்து தொகுதிகளிலும் மீண்டும், பாஜக,வே வெற்றி பெறும் என, பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம், சமீபத்தில் பாகிஸ்தான்., திவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள். குறிப்பிடலாம்.

மேலும், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், முப்படைகளில் அதிக அளவில் பணியாற்றுகின்றனர்.பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவரான, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல், இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால், பா.ஜ.,வுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகின்றது. ஒருவேளை, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணி அமைத்திருந்தால், ஹரித்வாரில் பாஜக-விற்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், அந்த அபாயமும் தற்போது இல்லாதது, பா.ஜ.,வுக்கு சாதகமாக உள்ளது.

கடந்த மக்களவை தேர்தலின் போது, 61.6 சதவீத ஓட்டுகள் பதிவானது. அப்போது, காங்கிரஸ் வசமிருந்த, ஐந்து தொகுதிகளையும், பாஜக., வென்றது. தற்போது, அந்த மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருப்பதுடன், மேற்கூறிய காரணங்களால், பாஜக-வுக்கு சாதகமாக உள்ளது என்று தெரிவிக்கிறது என்று தினமலர் செய்தியில் வெளியிட்டுள்ளது.

- Dina Malar

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்