அடிவயிற்றில் தொடர்ந்து வலிப்பதாக கூறி மருத்துவமனைக்கு சென்ற நபர்! பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

அடிவயிற்றில் தொடர்ந்து வலி இருந்ததால் மருத்துவமனைக்கு சென்ற முதியவர் சிறுநீரகத்தில் 552 கற்கள் இருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மும்பை சேர்ந்த 75 வயது முதியவருக்கு கடந்த சில மாதங்களாக அடிவயிற்றில் தொடர்ந்து வலி ஏற்பட்டது.

இதனால் அவதிப்பட்ட அவர் தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில் முதியவரின் வலதுபக்க சிறுநீரகத்தில் 552 கற்கள் இருப்பதை பார்த்து அதிர்ந்தனர்.

இதையடுத்து லேசர் மூலம் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கற்கள் அகற்றப்பட்டது.

இது குறித்து மருத்துவர் லோகேஷ் கூறுகையில், முதியவரின் சிறுநீரகத்தின் அருகே சிறிய துளையிட்டு லேசர் மூலம் முதலில் பெரிய கற்கள் உடைக்கப்பட்டு, சிறிய கருவிமூலம் அகற்றப்பட்டன.

தற்போது அவர் நலமாக இருக்கிறார் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers