விஜயகாந்த் குறித்த அதிர்ச்சி செய்தி

Report Print Deepthi Deepthi in இந்தியா

நாடாளுமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழக கட்சியின் தலைவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு நேர்காணல் நடத்தி வருகின்றனர்.

அதிமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடத்தியுள்ளார் விஜயகாந்த்.

இதன்போது விஜயகாந்த்தின் செயல்பாடுகள் விருப்ப மனு அளித்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், விஜயகாந்த் எதுவும் வாய்திறந்து பேசவில்லை, ஏதோ பேச வேண்டும் என்று முயற்சித்துள்ளார். ஆனால் அவர் பேசியதை கட்சியினரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒரே இடத்தில் மொத்தமாக அனைவரையும் அமரவைத்து விஜயகாந்த் நேர்காணல் நடத்தியுள்ளார்.'தேர்தலில் நின்றால் எவ்வளவு செலவு செய்வீர்கள்?' என ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் தூக்கி, சில்லரையை சுண்டுவது போல செய்கை காட்டி, விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.

இவரின் இந்த சைகை செயல்பாடுகள் வந்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் 60 நாட்கள் சிகிச்சை பெற்று சென்னை திரும்பியுள்ள விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பார் என மனைவி பிரேமலதா கூறிவருகிறார்.

ஆனால், நேற்று நடந்த நேர்காணலின் போது விஜயகாந்தால் பேச முடியவில்லை. இதனால் அவர் முழுவதுமாக குணமடையவில்லை. இதனால் அவர் நலமடையவில்லை என்றும் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க மாட்டார் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்