தற்கொலை செய்துகொள்ளப்போகிறோம்......களங்கம் ஏற்படுத்துகிறார்கள்: பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணன் வேதனை

Report Print Deepthi Deepthi in இந்தியா

பொய்யான தகவல்களை பரப்பி எங்கள் குடும்பத்திற்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள் என பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் பேசுவதுபோல இன்று காலையில் ஆடியோ வெளியானதையடுத்து அவர் இந்த புகாரை அளித்துள்ளார்.

அரசியல் ஆதாயத்திற்காக ஒருசிலர் தவறான தகவல்களைப் பரப்புவதால் எங்களுடைய குடும்பத்துக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள்.

இதனால் நாங்கள் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் இருக்கிறோம். நாங்கள் புகார் கொடுத்த அனைவரும் கைது செய்யப்பட்டுவிட்டார்கள்.

அப்படியிருக்கையில், எதற்காக இப்படி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். தவறான தகவல் பரப்பி வழக்கை திசை திருப்ப முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers