முன்னாள் கிரிகெட் வீரர் கவுதம் கம்பீர், மக்களவைத் தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் பாஜாக சார்பில், வேட்பாளராக களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் மாதம் நாடளுமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் பிரபலங்களை தங்கள் வசம் இழுக்குவதில் முயற்சித்து வருகின்றனர்.
டெல்லியில் மொத்தமாக 7 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கும் நிலையில், ஒரு தொகுதியில் மட்டும் கம்பீர், பாஜக சார்பில் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இது குறித்து எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை.
முன்னதாக, அவர் அரசியல் குறித்து விமர்சித்து அடிக்கடி பல கருத்துகள் வெளியிட்டு வந்தார். மேலும், புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, உயிரிழந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு பொறுப்பு ஏற்பதாக கம்பீர் தெரிவித்திருந்தார்.
மேலும், கடந்த 2014-ம் ஆண்டு, பஞ்சாப் மாநிலம் அமித்சரில் போட்டியிட்ட பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லிக்கு ஆதரவாக பிரசாரம் செய்திருந்தார்.
இதனால் அவரை பாஜக தேர்தலில் களம் இறக்க முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்தநிலையில் புதுடெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளராக கம்பீர் களமிறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.