காமகொடூரன்களை அரபுநாடுகளைப் போல தூக்கிலிட வேண்டும்! பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து கொந்தளித்த பா.விஜய்

Report Print Kabilan in இந்தியா

பொள்ளாச்சியில் 200 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், காமகொடூரன்களை தூக்கில் போட வேண்டும் என பாடலாசிரியர் பா.விஜய் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 200 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஃபைனான்சியர் திருநாவுக்கரசு, சதீஸ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாடலாசிரியர் பா.விஜய், காமகொடூரன்களை அரபுநாடுகளைப் போல தூக்கிலிட வேண்டும் என தனது ஆதங்கத்தை வீடியோ மூலமாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers