3 பெண்களை வசியப்படுத்தி தாலி கட்டிய மந்திரவாதி.....3 வது திருமணவரவேற்பின் போது நடந்த சம்பவம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருவாரூர் மாவட்டத்தில் 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளம் மந்திரவாதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குடும்ப கஷ்டத்தை நீக்க பூஜை செய்வதாக கூறி பெண்களை ஏமாற்றியுள்ளார்.

மந்திரவாதிக்கும், பத்மபிரியா என்பவருக்கும் 20 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 20 நாட்கள் கழித்து திருமண வரவேற்பு நடந்தபோது திடீரென வந்த இரண்டு பெண்கள் உண்மையை கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மந்திரங்களை கற்றுக் கொண்ட பாலாஜி, தன்னை ஒரு சக்திவாய்ந்த மந்திரவாதியாக காட்டிக் கொண்டு பூசாரியின் மகள் ராஜ்கலாவை காதலித்து முதலாவது திருமணம் செய்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு மாந்த்ரீக வேலைகளை செய்வதாக மகாலெட்சுமி என்பவரது மகள் அபிராமியை மயக்கி திருமணம் செய்து கொண்டு தலைமறைவாகியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers