கோபி கோடீஸ்வரன் ஆனது எப்படி? வெளிநாட்டிற்கு தப்பி ஓடி சிக்கிய தமிழனைப் பற்றி அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பல கோடி மோசடி செய்து வெளிநாட்டிற்கு ஓடிய தமிழகத்தைச் சேர்ந்த கோடீஸ்வரன் கோபி கிருஷ்ணனை பொலிசார் எப்படி பிடித்தனர் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையின் முக்கிய பகுதிகளான நுங்கம்பாக்கம், வடபழனி, தேனாம்பேட்டை என 10 இடங்களில் கால்சென்டர்கள் செயல்பட்டன. இங்கு பணியாற்றும் ஊழியர்கள், லோன் வேண்டுமா என போன் செய்து அவர்களுக்கு பணத்தின் ஆசையை காண்பித்து அவர்களை ஏமாற்றி வந்தனர்.

இதனால் பணத்தை இழந்த நபர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

ஆனால் இதற்கு மூளையாக செயல்பட்ட, சென்னை ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த கோபி என்கிற கோபி கிருஷ்ணனை மட்டும் பொலிசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் அவரையும் பொலிசார் விமானநிலையத்தில் வைத்து கைது செய்தனர். இது குறித்து பொலிசார் கூறுகையில், சென்னையில் கால்சென்டரை நடத்தி மோசடியில் ஈடுபட்ட கும்பலைக் கைது செய்து சிறையில் அடைத்தோம், ஆனால் மூளையாக செயல்பட்ட கோபி கிருஷ்ணன் என்பவரை தேடி வந்தோம்.

அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டதாகவும் தகவல் கிடைத்தது. அதன் பின் கோபி கிருஷ்ணனுக்கு வலதுகரமாகச் செயல்பட்டு வந்த தம்பதியான உமாபதி, சீதா மற்றும் சதீஷை ஆகியோரை கைது செய்தோம். மேலும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களையும் கைது செய்தோம்.

அவர்களில் சிலரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தபோது பல தகவல்கள் வெளியாகின. தலைமறைவான அவருக்கு எங்கிருந்து பணம் அனுப்பப்படுகிறது என்பதைக் கண்டறிந்து அதையும் தடை செய்தோம்.

இந்த சம்பவம் காரணமாக தலைமறைவாக இருந்த அவரின் அம்மா, அப்பா, தங்கையைக் கைது செய்தோம். பெற்றோர் கைது செய்யப்பட்டதை அறிந்த கோபிகிருஷ்ணன் மனம் மாறி சென்னைக்கு வர முடிவு செய்துள்ளார்.

இந்த தகவல் எங்களுக்கு முன்னரே தெரிந்ததால், அவரை விமானநிலையத்தில் வைத்து கைது செய்தோம் என்று கூறியுள்ளார்.

மேலும் கோபியைப் பற்றி வெளியான தகவலில், அவர் வெறும் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருந்திருக்கிறார்.

திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. தற்போது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதில் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியின் தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டு, இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அதாவது, 1 லட்சம் ரூபாய்க்கு இன்ஸ்சூரன்ஸ் செய்தால் நீங்கள் கேட்கும் தொகையை லோனாக வாங்கித் தருகிறேன். அதுவும் குறைந்த வட்டி எனச் சொல்லி மக்களிடம் ஆசை காட்டியுள்ளார்.

மக்களும் இதை நம்பி ஏமாந்துள்ளனர். ஆனால் கோபி கிருஷ்ணன் அந்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

சென்னையின் முக்கிய இடங்களில் அலுவலங்களை வாடகைக்கு எடுத்த அவர், மாதம் 10,000 ரூபாய் சம்பளத்தில் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளார்.

கோபி கிருஷ்ணனின் கால்சென்டரில் வேலை பார்க்கும் பலருக்கு இது ஒரு மோசடி கால் சென்டர் என்று தெரியாது. அந்தளவுக்கு கால் சென்டரின் மோசடி விவகாரங்களை ரகசியமாக வைத்துள்ளார்.

1,000 ரூபாய் தொடங்கி லட்சக்கணக்கான ரூபாயை ஏமாற்றிய கோபி கிருஷணன், குறுகிய காலத்தில் கோடீஸ்வரராக மாறினார்.

இதனால் அவரின் வாழ்க்கை ஸ்டைலே மாறியது. சொகுசு மற்றும் விலை உயர்ந்த கார்களை வாங்கி விற்கும் தொழிலில் கால்பதித்தார். அதிலும் சம்பாதித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

கோபி கிருஷ்ணனிடமிருந்து மட்டும் 13 சொகுசு கார்களை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த இவர் மோசடி செய்வதில் பிஹெச்டி என்று பொலிசார் கூறியுள்ளனர்,

அதுமட்டுமின்றி அவர் மூளையை நல்ல வழியில் பயன்படுத்தியிருந்தால் இன்று கோபி கிருஷ்ணன் தமிழக கோடீஸ்வரர்களின் டாப் 10 பட்டியலில் கண்டிப்பாக இடம்பிடித்திருப்பார் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...