நெஞ்சை பதை பதைக்க வைக்கும் வீடியோ! பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம்: அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பேஸ்புக்கில் அறிமுகமாகி நெருங்கிப் பழகியுள்ளார். அதன் பின்னர், தனது நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதாக கூறி அவர், குறித்த பெண்ணை காரில் ஏற்றிச் சென்றுள்ளார்.

வழியில் ஊஞ்சபேலம்பட்டி என்ற இடத்தில் திருநாவுக்கரசின் நண்பர்கள் காரில் ஏறியுள்ளனர். அவர்கள் அப்பெண்ணை செல்போனில் ஆபாசமாக படம்பிடித்து, அதனை வைத்து மிரட்டி அவரது நகைகளை வாங்கியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அப்பெண் இச்சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், இதுகுறித்து பொலிசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. பின்னர் புகார் மீதான விசாரணையை தொடங்கிய பொலிசார் சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில், 40க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததைக் கண்டு பொலிசார் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தலைமறைவான நிலையில், அவர் மீது பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டு தனிப்படை அமைத்து திருநாவுக்கரசை தேடி வந்த பொலிசார், திருப்பதி பகுதியில் வைத்து கைது செய்தனர். இந்நிலையில், தன்னை நம்பி வந்த பெண்ணை தனது நண்பர்களுடன் சேர்ந்து திருநாவுக்கரசு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், அதனை வீடியோ எடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் அப்பெண் கதறி அழுவது நெஞ்சை பதற வைக்கும் வகையில் உள்ளது. அத்துடன் இவர்கள் 20 பேர் கொண்ட கும்பலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த கும்பலால் மேலும் பல இளம்பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிப்பதாக கூறிய நிலையில், 7 ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட பெண்களை இந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ஜீ.வி.பிரகாஷ்குமார், சித்தார்த் ஆகியோர் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers