தேர்தலில் போட்டியா…? அப்போ கண்டிபாக உங்கள் மீதுள்ள வழக்குகளையும் விளம்பரம் செய்ய வேண்டும்…! புதிய நடைமுறை

Report Print Abisha in இந்தியா

இந்திய நாடாளுமன்ற தேர்தலில், வேட்டபாளர்கள் தங்கள் மீதான குற்ற ஆவணங்களை விளம்பரபடுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் 7கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து அனைத்து கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் பிரச்சராத்தில் குதித்துள்ளனர். குறிப்பாக போஸ்டர்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், செய்திதாள் விளம்பரங்கள் என்று அடுக்கி கொண்டே போகின்றது.

முன்னதாக தேர்தல் ஆணையம் ஒரு உத்தரவை பிறப்பிருந்தது. என்னவென்றால்,வேட்பாளர்கள் தங்கள் மீதான வழக்கு மற்றும் தண்டனை விவரங்கள் குறித்த தகவல்களை பிரபல நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் குறைந்தபட்சம் 3 நாட்களாவது விளம்பரம் செய்ய வேண்டும் எனவும், வழக்குகள் இல்லை என்றாலும் அது குறித்த தகவல்களையும் விளம்பரம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பிட்டிருந்தது.

மேலும், வேட்பாளர்களின் குற்ற ஆவணங்களை சம்பந்தப்பட்ட கட்சித் தலைமையும் விளம்பரப்படுத்த வேண்டும் எனவும், அது குறித்த தகவல்களை இணையதளத்திலும் வெளியிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நடை முறை 2019-நாடாளுமன்றத்தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் நடைமுறைபடுத்த உள்ளது. மேலும், இதை செய்ய தவறும் கட்சிகள் மீது அங்கீகாரம் ரத்து செய்யும் அளவில் கடுமையான நடவடிக்கைகள் பாயும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers