நெருப்பு கோளமாக மாறிய கார்: தாயும் இரு மகள்களும் உடல் கருகி பரிதாப மரணம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய தலைநகர் டெல்லியில் ஓடும் காரில் தீப்பிடித்ததில் தாயும் 2 மகள்களும் உடல் கருகி பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு டெல்லியில் குடும்பத்துடன் குடியிருக்கும் உபேந்தர் மிஸ்ரா என்பவர் தமது டட்சன் கோ காரில் மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் வெளியே சென்றுள்ளார்.

மேம்பாலத்தின் மீது ஏறிய போது காரின் எரிபொருளாக பயன்படுத்தப்பட்ட எரிவாயு கசிந்து திடீரென தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் காரை ஓட்டிச் சென்ற உபேந்தர் மிஸ்ரா முன்னிருக்கையில் அமர்ந்திருந்த தமது மூன்றாவது மகளை தூக்கிக் கொண்டு உடனடியாக வெளியேறியுள்ளார்.

ஆனால் அவர் எவ்வளவு முயன்றும், மனைவி ரஞ்சனா, 2 மற்றும் 5 வயதுடைய மகள்கள் ரிதி, நிக்கி ஆகியோரைக் காப்பாற்ற முடியவில்லை என கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் மூவரின் உடலையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியும், மகள்கள் இருவரும் அடையாளம் தெரியாத வகையில் கருகியதைக் கண்ட உபேந்தர் அதிர்ச்சி நிலைக்கு சென்றுவிட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...