திருமண சடங்குகளை செய்ய முடியாமல் திணறிய மணமகன்.. தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண்ணின் அதிரடி முடிவு

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மணமேடையில் மணமகன் முழு குடிபோதையில் வந்த நிலையில் மணப்பெண் அதிரடியாக திருமணத்தை நிறுத்தினார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பப்ளு குமார். இவருக்கும் ரிங்கி குமாரி என்ற பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடக்கவிருந்தது.

இந்நிலையில் ரிங்கி குமாரி மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார்.

அதன்பின்னர் பப்ளு மணமேடைக்கு வந்த விதத்தை பார்த்து மணப்பெண் உட்பட எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர். காரணம் முழு குடிபோதையில் நிற்கக்கூட முடியாதபடி இருந்தார் பப்ளு.

அவரால் மணமேடையில் நின்று கொண்டு திருமண சடங்குகளை கூட செய்யமுடியவில்லை.

இதனால் வெறுப்படைந்த மணப்பெண் ரிங்கி குமாரி, தாலிகட்டும் நேரத்தில் அவரை திருமணம் செய்ய முடியாது என அதிரடியாக கூறினார்.

இரு குடும்பத்தாரும் எவ்வளவோ ரிங்கியை சமாதானப்படுத்த முயன்றும் அவர் இறுதிவரை திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை.

இதையடுத்து மணமகன் குடும்பத்தார் மணப்பெண்ணிடம் வாங்கிய வரதட்சணை திரும்ப கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers