விபத்தில் உயிரிழந்த கணவன்... துக்கம் தாளாமல் மகளுடன் சேர்ந்து விஷம் குடித்த தாய்!

Report Print Vijay Amburore in இந்தியா
561Shares

நாகை மாவட்டத்தில் கணவன் விபத்தில் சிக்கி உயிரிழந்த துக்கம் தாளாமல் மகளுடன் சேர்ந்து தாயும் விஷம் குடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் கடந்த மாதம் 27ம் திகதி சாலை விபத்தில் பலியாகினார். இவருக்கு அகிலாதேவி என்ற மனைவியும் ஹர்ஷா என்ற 3 வயது மகளும் உள்ளனர்.

கணவர் இறந்ததிலிருந்து இருவரும் சோகமாகவே இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை அகிலா தன்னுடைய காதில் விஷத்தை ஊற்றிக்கொண்டும், மகளுக்கு விஷத்தை குடிக்கவும் கொடுத்துள்ளார்.

இருவரும் ஒரே நேரத்தில் திடீரென மயங்கி விழுவதை பார்த்த வீட்டார், அதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு தீவிர சிகிச்சைக்கு பின், தன்னுடைய கணவன் இல்லாத நிலையில் தனக்கு வாழ விருப்பமில்லை எனவும், மகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக விஷம் கொடுத்தேன் என கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்