இந்தியா - பாகிஸ்தான் போரின் போது இந்தியாவிலிருந்து தப்பி சென்ற ராஜீவ் காந்தி?

Report Print Abisha in இந்தியா
86Shares

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இந்தியா - பாகிஸ்தான் போரின் போது இந்தியாவில் தப்பிசென்றார் என்ற தகவல் பொய்யானது என்று பிபிசியின் fact check தெரிவித்துள்ளது அதன் முழுவிவரங்கள் பார்க்கலாம்.

பாகிஸ்தான்பிடித்து வைத்திருந்த விங் கமாண்டர் அபிநந்தன் இந்தியா திரும்பிய பிறகு, இந்தியா-பாகிஸ்தான் போரின் போது ராஜீவ் காந்தி நாட்டைவிட்டு தப்பி சென்றார் என்ற பகிர்வு வைரலாகியிருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்தபிப்ரவரி 27ம் தேதி பாகிஸ்தானிடம் பிடிப்பட்டார் அபிநந்தன்.

இந்நிலையில்,ராஜீவ் காந்தி குறித்த இந்த செய்தி இந்தியாவில் உள்ள வலதுசாரிகள் இடையே பரப்பப்பட்டு ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப் குழுக்களிலும் பகிரப்பட்டு வருகிறது.

அதில் தெரிவித்துள்ளது ”இந்தியாவின் விமான தாக்குதலில் ராகுல் காந்தி தற்போது ஆதாயம்தேடிகொண்டிருக்கிறார். ஆனால் அவர் தந்தை ராஜீவ்காந்தி இக்கட்டான சூழலில் நாட்டைவிட்டு தப்பி ஓடிவிட்டார் என்று தெரிவித்துள்ளது.

குறிப்பாக இதனை நிரூபிப்பதற்காகஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பயனாளர்கள் 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டு "Postcard"மற்றும் "Pica Post"வலைதளங்களில் வந்த ஒரு செய்திகளை சுட்டிக்காட்டியுள்ளனர். இது ஆயிரகணக்கானோரால் பலமுறை பகிரப்பட்டுள்ளது.

ஆனால்,இந்த தகவல் முற்றிலும் தவறானது என்று பிபிசியின் உண்மை பரிசோதிக்கும் குழுகண்டுபிடித்துள்ளது.

உண்மையில், இந்திய பிரதமர்களுக்கான அதிகாரப்பூர்வ வலைதளத்தின்படியும், அனைவரும் பயன்படுத்தும் விக்கிபீடியா உள்ளிட்ட தளங்கள்படி ராஜீவ் காந்தி 1944ஆம் ஆண்டு ஆகஸ்டு 20ம் தேதி மும்பையில் பிறந்துள்ளார். ராஜீவ் காந்தி பிரதமராகும்போது அவருக்கு வயது 40 என்பது அதகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்,1971 இந்தியா - பாகிஸ்தான் போரின்போது, இந்திரா காந்திதான் நாட்டின் பிரதமராகஇருந்துள்ளார். அப்போது ராஜீவ் காந்தி அரசியலில் ஈடுபடவே இல்லை.

முக்கியமான விடயம் என்னவென்றால், அதிகாரபூர்வ வலைதளத்தின் படி ராஜீவ் காந்தியின் பொழுதுபோக்கு,விமானம் ஓட்டுவது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,1968ஆம் ஆண்டு அவர், இந்தியன் ஏர்லைன்ஸ் சேவையில் விமானியாக பணியாற்றத்தொடங்கினார். சுமார் பத்தாண்டுகளுக்கு விமானியாக ராஜீவ் காந்தி பணிபுரிந்துள்ளார்.

ஆனால்,இந்திய விமானப்படையின் விமானியாக அவர் இருந்ததில்லை. அவர் போர் விமானங்களை இயக்கினார் என்ற கூற்று தவறானது.

குழந்தைகளுடன் இந்தியாவில்இருந்து தப்பித்தார் என்ற கருத்து முற்றிலும் பொய்யானதுதான். இதுதொடர்பான செய்தியில், ராஜீவ் காந்தி, அவரது மனைவி சோனியா காந்தியோடு அவரதுகுழந்தைகளுடன் அதாவது, பிரியங்கா மற்றும் ராகுலுடன் 1971 போரின்போது இத்தாலிக்கு தப்பிச் சென்றார் என்று கூறுவதும் பொய்யானதுதான்.

போரின்போதுராகுல் காந்தி சுமார் ஆறு மாத குழந்தையாக இருந்தார். இளையவரான பிரியங்கா காந்தி போர்முடிந்து 1972ஆம் ஆண்டுதான் பிறந்தார்

மேலும்,ராஜீவ் காந்தி நாட்டை விட்டுச் சென்றார் என்பதும் வெறும் வதந்திகள்தான் என்றும் கித்வாய் கூறுகிறார்.

இது குறித்த மோலும் பேசி உள்ள கித்வாய் "போரில் ராஜீவ் காந்திக்கு எந்த பங்கும் கிடையாது. அவரது தாய்தான் நாட்டை ஆண்டு கொண்டிருந்தார். மற்றுமொரு முக்கியமான விஷயம், 1971 போரின்போது இந்திரா காந்தி எங்கும் செல்லவில்லை. மேலும் அவரது ஆட்சிக்காலத்தில்தான், பாகிஸ்தானை இந்தியராணுவம் வீழ்த்தியது. இதனால், அவரது மகனையோ அல்லது ராகுலையோ எவ்வாறு குற்றம் சொல்லமுடியும்" என்றும் அவர் தெரிவித்தார்.

சமூக வலைதளங்கள்அனைவரும் கருத்துகள் பகிர்ந்தாலும் உண்மை தன்மையை அறியாமல் பகிர்ந்து பொது வெளியில் அனைவரும் முட்டாளாகிறோம் என்பது இதன் மூலம் உண்மையாகி இருக்கிறது.

- BBC - Tamil

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்