சடலத்துடன் செல்பி எடுத்து அனுப்பினால் மட்டுமே விடுமுறை: இப்படியும் ஒரு கொடுமை

Report Print Deepthi Deepthi in இந்தியா
127Shares

பெங்களூர் மாநிலத்தில் சடலத்துடன் செல்பி எடுத்து ஆதாரம் காட்டினால் மட்டுமே விடுமுறை அளிப்பது போக்குவரத்து டிப்போவில் தொடர்ந்து நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

பெங்களூரு மாநகர போக்குவரத்துக்கழக டிப்போ எண் 31ன் மேலாளராக இருப்பவர் பிரசாந்த். இவர் சமீபத்தில் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.

இவர் குறித்த விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்களின் உறவினர்கள் யாராவது இறந்து விட்டால், அதில் கலந்து கொள்ள டிப்போ மேலாளரிடம் விடுமுறை கேட்பது வழக்கம்.

ஆனால், பிரசாந்த் விடுமுறை கொடுப்பதில்லை. சடலத்துடன் செல்பி எடுத்து அனுப்பினால் மட்டுமே அனுமதி அளித்து வந்ததாகவும், செல்பி எடுக்காதவர்களுக்கு விடுமுறை அளிக்காமல் மற்றும் ஆப்செண்ட் போட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

தற்போது, இதுகுறித்து தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்