காஷ்மீரில் தீவிரவாதிகளால் ராணுவ வீரர் கடத்தலா…! உண்மை என்ன?

Report Print Abisha in இந்தியா
71Shares

ஜம்மு காஷ்மீரில், ராணுவ வீரர் ஒருவர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியது, அது தவறானதகவல் என்று பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், பத்கம் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது யாசீன். ராணுவ வீரரானஇவர் விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில்முகமது யாசீனை சிலர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றதாக, அவரது குடும்பத்தினர், காவல்துறையிடம்புகார் அளித்ததாக நேற்று செய்தி வெளியானது.

தொடர்ந்து அதை ஒத்து கொள்ளும் வகையில், தி நியூஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு காஷ்மீர் மத்திய பிரிவு டிஐஜி,வி.கே.பிர்தி அளித்தபேட்டியில், இரவு 8.45 மணியளவில், இரண்டு மூன்று ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள், முகமது யாசீன் வீட்டுக்குள்அத்துமீறி நுழைந்ததாகவும், துப்பாக்கி முனையில்இராணுவ வீரரை கடத்திச் சென்றுவிட்டனர் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் இன்று, விளக்கம் அளித்துள்ளது அதில், ராணுவ வீரர் கடத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. முகமது யாசீன் பத்திரமாக இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

இதனிடையே, காஷ்மீர் மாநிலம் கிஸ்துவாரிலுள்ள ஒருபொலீஸ்காரர் வீட்டிலிருந்துஏகே 47 துப்பாக்கி திருடப்பட்டுள்ளது. மேலும், துணைகமிஷனரின் தனிப் பாதுகாவலராக உள்ள பொலீஸ்காரரின் வீட்டிலிருந்து, துப்பாக்கி திருடிச் செல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதை தீவிரவாதிகள் தான் செய்திருக்கலாம் என்றுகூறப்பட்டுள்ளது.

ANI-யின் தகவல்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்