இலங்கை சென்றிருந்த போது நான் இதை பார்த்தேன்...14,000 வீடுகள் கட்டித் தரப்படும்! பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு

Report Print Santhan in இந்தியா

தமிழகம் வந்த இந்திய பிரதமர் மோடி இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு 14,000 வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவித்துள்ளார்.

மக்களவைத் தோ்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தோ்தலுக்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் கிளாம்பாக்கத்தில் கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நகரங்களில் சிறந்த காஞ்சிபுரத்தில் இருக்கிறோம்.

செம்மொழிகளில் முதன்மையானது தமிழ் மொழி, தமிழ் மொழி மிக அழகானது. தமிழகத்தில் விசைத்தறிகள் மேம்படுத்த மத்திய அரசு உதவி வருகிறது. தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தறிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

திரையுலகில் மட்டுமல்ல மக்களின் இதயங்களையும் வென்றவர் எம்.ஜி.ஆர். நான் இலங்கை சென்றிருந்த போது எம்.ஜி.ஆர் பிறந்த இடத்தை பார்வையிட்டேன்.

இலங்கையில் தமிழர்களுக்கு இந்திய அரசு சார்பில் 14000 வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்திற்குச் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளேன்.

1900 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையிலிருந்து மீட்கப்பட்டனர். தமிழர்கள் எங்கிருந்தாலும் பிரச்னை என்றால் முதலில் நடவடிக்கை எடுப்பது மத்திய பாஜக அரசு தான் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்