கல்லூரி வகுப்பறையில் எல்லோர் முன்னிலையிலும் மாணவர் செய்த செயல்: அவமானத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் வகுப்பறையில் எல்லோர் முன்னிலையிலும் மாணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் மாலாஸ்ரீ (21) என்ற மாணவி சிவில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் மண்டையூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்து தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.

மாலாஸ்ரீயோடு முகமது இம்ரான் (21) என்ற மாணவர் அதே வகுப்பில் படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரி வகுப்பறையில், ஓய்வு நேரத்தில் தலைவலிப்பதாக கூறிய மாலாஸ்ரீ, முகமது இம்ரான் பேக் இருந்த மேஜை மீது தலை வைத்து படுத்திருந்தார்.

இதனைப்பார்த்த முகமது இம்ரான் ஆத்திரத்தில் மாலாஸ்ரீயை திட்டி கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மற்ற மாணவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

இந்த சம்பவத்தால் மனமுடைந்த மாலாஸ்ரீ விடுதிக்கு சென்று எலி மருந்தை குடித்தார்.

உயிருக்கு போராடிய அவரை மற்ற மாணவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாலாஸ்ரீ இறந்தார்.

இதுகுறித்து பொலிசார் மாணவன் முகமது இம்ரான் மீது மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்