இப்படியும் ஒரு தாயா! உன்னை கொல்ல விஷம் கலந்திருக்காங்க... தங்கையின் எச்சரிக்கையால் உயிர்தப்பிய அக்கா

Report Print Deepthi Deepthi in இந்தியா

தர்மபுரி மாவட்டத்தில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காரணத்தால் பெற்ற மகளையே கொலை செய்த முயன்ற பெற்றோரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

குமார் - தனலட்சுமி தம்பதியினருக்கு 4 பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் உஷா அங்கிருக்கும் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

நான்கு பேரும் பெண் பிள்ளைகள் என்பதால் மூத்த மகள் உஷாவுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். ஆனால், தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் தொடர்ந்து படிக்க வேண்டும் என உஷா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார், உஷா கூறியதை ஏற்றுக்கொள்ளாத முடியாத தந்தை, வேன் டிரைவரை தனது மகள் காதலிப்பதாக தவறாக நினைத்து சண்டைபோட்டுள்ளார்.

ஆனால், தான் காதலிக்கவில்லை என மகள் கூறியும் அதனை நம்பாத பெற்றோர் வீட்டில் அடைத்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில், மார்ச் 5-ம் தேதி பள்ளிக்குச் செல்லுமாறு உஷாவிடம், தாய் தனலட்சுமி கூறி, மதிய உணவை டிபன் பாக்சில் வைத்துக் கொடுத்துள்ளார்.

ஆனால், அந்த உணவில் விஷம் கலந்துகொடுத்துள்ளார். இதை அறியாமல் உஷா இருந்துள்ளார். அதே பள்ளியில் படிக்கும் அவரது தங்கை, அக்கா மதிய உணவை நீ சாப்பிட வேண்டாம், அம்மா உன்னைக் கொல்ல மதிய உணவில் நெல் வயலுக்குப் போடும் (குருணை மருந்து) விஷத்தை கலந்து கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உஷா, ஆசிரியர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இருவரும் தவறை ஒப்புக்கொண்டதையடுத்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்