தாய் மற்றும் மகள் கொடூர கொலை: 5 ஆண்டுகளுக்கு பின்னர் சிக்கிய இளைஞர்... வெளியான பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் தாய் மற்றும் மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தில் கடந்த 2015ம் ஆண்டு முன் விரோதம் காரணமாக லட்சுமி என்ற பெண்ணும் அவர் மகளான நிரோஷா என்பவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

இந்த இரட்டை கொலை வழக்கில் பொலிசார் 5 பேரை கைது செய்தனர்.

இதில் ஒருவரான பிரகாஷ் என்பவர் ஜாமீனில் வெளியில் வந்த நிலையில் பின்னர் தலைமறைவானார். இந்நிலையில் பிரகாஷை பொலிசார் வலைவீசி தேடி வந்தனர்.

இதையடுத்து பிரகாஷ் ஜனப்பன்சத்திரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் அங்கு சென்ற பொலிசார் பிரகாஷை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரகாஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்