100-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச படம்! அவர்களை மயக்கியது எப்படி? முக்கிய குற்றவாளியின் திடுக்கிடும் வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தத்தாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவன் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.

பொள்ளாச்சியில் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வரும் ரிஷ்வந்த் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவியுடன் பேஸ்புக்கில் நண்பராக அறிமுகாமி, அதன் பின் கடந்த வாரம் அந்த பெண்ணை போனில் தொடர்பு கொண்டு பேசிய இவர் நேரில் சந்திக்க வருமாறு அழைத்துள்ளான்.

இதனால் அந்த பெண்ணும் குறித்த இடத்திற்கு நம்பி சென்ற போது, ரிஷ்வந்த் மட்டும் தனியாக வராமல்

வசந்தகுமார், சதீஸ், திருநாவுக்கரசு ஆகியோரை காரில் அழைத்து வந்துள்ளான்.

அதன் பின் அந்த பெண்ணை காரில் அழைத்துச் சென்ற போது, ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்து மிரட்டி, ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு முறையும் இப்படி டார்ச்சர் செய்ததால், அந்த பெண் காவல்நிலையத்தி புகார் அளித்தார். இதையடுத்து ரிஷ்வந்த், வசந்த், சதீஸ் ஆகியோரை பொலிசார் கைது செய்து அவர்கள் போனை சோதித்த போது சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் வீடியோ இருந்தது.

அதில் சில பெண்களை இவர்கள் தங்கள் காம ஆசைக்கு இரையாக்கியுள்ளனர் என்பதும் தெரியவந்தது. திருநாவுக்கரசு மட்டும் பொலிசாரிடம் சிக்காமல் இருந்த நிலையில் நேற்று அவரையும் பொலிசார் கைது செய்தனர்.

அதன் பின் அவனை இரகசிய இடத்தில் வைத்து பொலிசார் கிடுக்குப் பிடி விசாரணை மேற்கொண்ட போது, கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே நட்பாக பழகும் இளம் பெண்களை மயக்கி, ஆபாச படமெடுத்து, அதன் பின் அவர்களுக்கு பாலில் தொல்லை கொடுத்து வந்ததாக திருநாவுக்கரசு வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

பொலிசார் தொடர்ந்து கூறுகையில், தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசு திருப்பதியில் இருந்து வந்த போது கைது செய்யப்பட்டார் எனவும் அவர் இந்த சம்பவத்தில் பலருக்கும் தொடர்பு இருப்பதாக கூறியிருந்தார்.

ஆனால் அதை எல்லாம் அவர் பயத்தின் காரணமாக கூறியுள்ளார்.மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பில்லை, இந்த நான்கு பேர் மட்டுமே இந்த செயலில் ஈபட்டுள்ளனர் என்பதையும் திருநாவுக்கரசு ஒப்புக் கொண்டார் என்று பொலிசார் கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி 100-க்கும் மேற்பட்ட பெண்களின் வீடியோ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதே, அது உண்மையா என்று செய்தியாளர்கள் கேட்ட போது, போன்களை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாகவும் அதில் அப்படி உண்மையிருந்தால் அதற்கு ஏற்ற வகையில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்