தமிழர்கள் 7 பேர் விடுதலை விவகாரம்! பேரறிவாளன் தொடர்பாக இதுவரை வெளிவராத வீடியோவை வெளியிட்ட அற்புதம்மாள்

Report Print Santhan in இந்தியா

ராஜீவ்காந்தி கொலை வழக்கு விவகாரம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பேரறிவாளனின் தாய் வீடியோ ஒன்றை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுவிக்க கோரி தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்து வருகிறாஊ.

சட்டப் பிரிவு 161-ஐ பயன்படுத்தி சம்பந்தப்பட்ட மாநில அரசே விடுதலை செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர், தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அதை அனுப்பி இருந்தது.

இந்நிலையில் சிறையில் இருக்கும் இவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் மார்ச் மாதம் 9-ஆம் திகதி பல்வேறு நகரங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த போவதாக பேரறிவாளன் தயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் படி சென்னை உயர்நீதிமன்றத்திலுள்ள பல்வேறு வழக்கறிஞர்களை சந்தித்து கேட்டுக் கொண்டு வருகிறார்.

இதையடுத்து அவர் தற்போது தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், எந்த ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொண்டு எனது மகனை குற்றவாளி என சட்டம் சொன்னதோ அதை பதிவு செய்த அதிகாரியோட குரல் இது என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அப்போது காவல்துறை அதிகாரியாக இருந்தவர் கூறுகையில் பேரறிவாளன் எந்த கொலையை செய்ததாகவோ அல்லது பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவோ எவ்வித ஆதாரங்களும் கிடையாது எனவும் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் மீது கொண்ட இரக்கத்தினாலும் தமிழ் மீது கொண்ட பற்றிலும் ஈடுபட்ட இளைஞர்களில் ஒருவர்தான் பேரறிவாளன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பிறகும் ஒரு நிரபராதியின் வாழ்வை அழித்து, ரத்தத்தை குடித்து என்னத்த சாதிக்க போறீங்க? என அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்