திருமணமான 10 நாளில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்: அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணமான 10 நாளில் மகள் விதவை ஆகிவிட்டதால் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அடுத்த குனிச்சிமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன் (50) இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும் இரண்டு ஆண் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

மகளை செல்லமாக வளர்த்த பெரியண்ணன் படிக்க வைத்து பட்டதாரியும் ஆக்கினார். ஒரு மாதத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைத்தனர்.

ஆனால் கல்யாணம் ஆன பத்தே நாளில் மாப்பிள்ளை இறந்துவிட்டார். இதனால் கணவனை இழந்த சுமதி அப்பா வீட்டிற்கு வந்துள்ளார்.

மகளுக்கு நேர்ந்த நிலைமையை எண்ணி கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்தார் பெரியண்ணன்.

இந்நிலையில் மகளுடன் எதிகாலத்தை பற்றி மனம் விட்டு இன்று பேசினார். பிறகு நேராக மொளகரம்பட்டி நந்தனம் கலைக் கல்லூரி அருகில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்