இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தானில் 300 பேர் உயிரிழந்தார்கள்: மத்திய உள்துறை அமைச்சர் தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பாகிஸ்தான் முகாம் மீது இந்திய நடத்திய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்தார்கள் என்பது உண்மையானது தகவலா என்ற சர்ச்சை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், 300 பேர் உயிரிழந்தது உண்மைதான் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் குறித்த சந்தேகங்களை எதிர்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருவதால் பாகிஸ்தான் அரசு இந்தியாவை தொடர்ந்து விமர்சித்து வருகின்றது.

தாக்குதல் நடந்த இடத்தில் 300 செல்போன்கள் இயங்கியதற்கான சிக்னல்களை பதிவு செய்துள்ளதாக தேசிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் கூறியுள்ளதை சுட்டிக் காட்டிய அவர், மரங்கள்தான் செல்போன்களை பயன்படுத்தியதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்று கேட்பவர்கள், பாகிஸ்தான் நாட்டுக்கு சென்று சடலங்களை எண்ணிப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்