கைகுழந்தையுடன் அரை நிர்வாணமாக தெருவில் ஓடிய கர்ப்பிணி பெண்

Report Print Vijay Amburore in இந்தியா

மதுரையில் பேய் விரட்டுவதாக கூறி கர்ப்பிணி பெண்ணின் ஆடைகளை களைந்து துன்புறுத்திய மந்திரவாதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மதுரையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தினமும் மது அருந்திவிட்டு தன்னுடைய மனைவி முத்து பாண்டி அம்மாளை கடுமையாக தாக்கி வந்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் பாண்டி அம்மாள் படுத்த படுக்கையாக கிடந்துள்ளார். இதனை பார்த்த விஜயகுமார் தன்னுடைய மனைவிக்கு பேய் பிடித்திருக்கிறது எனக்கூறி பாண்டி அம்மாள், அவருடைய தாய் மற்றும் கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு செல்வம் என்கிற மந்திரவாதியை சந்திக்க சென்றனர்.

உள்ளே பாண்டி அம்மாளையும், கைகுழந்தையையும் மந்திரவாதியிடம் ஒப்படைத்துவிட்டு இவர்கள் இருவரும் வெளியில் நின்று கொண்டிருந்துள்ளனர்.

உள்ளே சாமி ஆடுவதாக கூறிய செல்வம் சவுக்கை எடுத்துக்கொண்டு, 4 மணிநேரமாக முத்துப்பாண்டி அம்மாளை தாக்க ஆரம்பித்துள்ளான். உச்சந்தலையில் இருந்து முடியை பிடிங்கி எறிந்ததோடு, சேலையையும் உருவி அடிக்க ஆரம்பித்துள்ளார்.

இதில் வலி தங்க முடியாமல் இருந்த அந்த 4 மாத கர்ப்பிணி பெண், அரை நிர்வாணத்துடன் அங்கிருந்து பொலிஸ் நிலையம் வரை ஓடி சென்றுள்ளார்.

அங்கு பாண்டி அம்மாள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், மந்திரவாதி செல்வம், கணவர் விஜயகுமார் அவரது இரு நண்பர்களான சேவுகபாண்டிய, சுப்பிரமணி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்