இந்திய தாக்குதலில் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட விவகாரம்: வைரலான மத்திய அமைச்சரின் பேச்சு

Report Print Arbin Arbin in இந்தியா

எதிரிகளின் பகுதிகளை ஊடுருவித் தாக்கமுடியும் என்பதுதான் நோக்கமே தவிர தாக்குதலில் மனித இழப்புகளை ஏற்படுத்துவது அல்ல என்று மத்திய அமைச்சர் ஒருவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் முகாம் அழிக்கப்பட்டதற்கான ஆதாரத்தை எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில்,

சிபிஎம் கட்சி கொல்கத்தாவில் வெளியிட்டுள்ள வீடியோவில் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் பாலாகோட் தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை என்ற தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

குறித்த காணொளியில், எதிரிகளின் பகுதிகளை ஊடுருவித் தாக்கமுடியும் என்பதுதான் நோக்கமே தவிர தாக்குதலில் மனித இழப்புகளை ஏற்படுத்துவது அல்ல.

இந்திய ஊடகங்களும் சர்வதேச ஊடகங்களும் மோடி கூறியதாக சில தகவல்களை வெளியிட்டன. பாலாகோட் தாக்குதலுக்குப் பிறகு நடந்த ஒரு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

ஆனால் அக்கூட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை.

நான் கேட்கிறேன், பிரதமர் மோடியோ, அல்லது எந்த அரசாங்க செய்தித் தொடர்பாளரோ அல்லது எங்களுடைய கட்சித் தலைவர் அமித் ஷாவோ பாலாகோட் தாக்குதலில் இத்தனை பேர் இறந்தார்கள் என்று எப்போதாவது சொல்லியிருக்கிறார்களா?

பாலாகோட் தாக்குதலின் நோக்கம், தேவைப்பட்டால் பாகிஸ்தானின் கொல்லைப்புறத்திற்கே சென்று தாக்கி அழிக்க முடியும் என்ற செய்தியை அனுப்புவதற்குத்தானே தவிர,

எந்த ஒரு உயிரையும் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்கானதல்ல. அப்படி யாரையும் கொல்லவும் இல்லை. என மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.அலுவாலியா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்