அபிநந்தன் உடலில் ரகசிய சிப் பொருத்தப்பட்டதா? எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை

Report Print Raju Raju in இந்தியா

அபிநந்தன் உடலில் உளவு கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை என அபிநந்தனுக்கு எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் உறுதியாகியுள்ளது.

பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட அபிநந்தன் நேற்று முன் தினம் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவர் உடலில் சிப் எனப்படும் உளவு கருவிகள் பொருத்தப்பட்டதா என சிலர் சந்தேகம் எழுப்பினர்.

இந்நிலையில் அவரின் பரிசோதனை முடிவுகள் தற்போது வந்துள்ளது.

அதில் அபிநந்தன் உடலில் உளவு கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை என அவருக்கு எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் தெரியவந்துள்ளது.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ளவர்கள் அடித்ததால் அபிநந்தன் உடலில் காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், விமானத்தில் இருந்து கீழே குதித்ததால் அவர் தண்டுவடத்தின் கீழ் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்