அபிநந்தனிடம் இந்திய உளவுத்துறை விசாரணை: வெளிவரும் முக்கிய தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா

பாகிஸ்தானில் இருந்து மீட்கப்பட்ட இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு ராணுவ மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் உளவுத்துறை விசாரணைக்கும் உட்படுத்தப்பட உள்ளார்.

இந்த விசாரணையானது ராணுவ விதிமுறைப்படி நடைபெறும் எனவும் தெரியவந்துள்ளது.

நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அரசால் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு ராணுவ விதிமுறைகளின்படி சில கட்டாய மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

ராணுவ மருத்துவமனையிலேயே இந்த சோதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து டெல்லியில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த தனது குடும்பத்தினரைச் சந்திக்க அவர் அனுமதிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ராணுவ உளவுத்துறை மற்றும் மத்திய உளவுத்துறை உள்ளிட்ட பல அதிகாரிகள் அபிநந்தனிடம் விசாரணை நடத்துவார்கள் எனத் தெரியவந்துள்ளது.

இந்தியர்களால் தற்போது பெரிதும் மதிக்கப்படும் அபிநந்தன் எதிரி நாட்டின் போர் கைதியாக இருந்தமையால்,

ராணுவ விதிமுறைகளின்படி சில தர்மசங்கடமான பரிசோதனை மற்றும் விசாரணைகளுக்கு அவர் உட்படுத்தப்படுவதை தவிர்க்க முடியாது.

ஏனெனில், அபிநந்தனுக்கே தெரியாமல் அவரது உடலில் பாகிஸ்தான் ராணுவம் ஏதேனும் உளவுக்கருவிகளைப் பொருத்தியிருக்க வாய்ப்பு உள்ளது என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மட்டுமின்றி, அபிநந்தன் பாகிஸ்தானில் சுமார் 48 மணி நேரம் மட்டுமே போர் கைதியாக இருந்திருக்கிறார்.

இந்த நேரங்களில் அபிநந்தனிடம் பாகிஸ்தானியர்கள் கேட்ட கேள்விகள், நடந்துகொண்ட விதம் என அனைத்தும் அவரிடம் விசாரிக்கப்படும்.

இதன் மீது மனரீதியான உளவியல் விசாரணையும் நடத்த வாய்ப்புள்ளது என முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்