அபிநந்தன் அளித்த வாக்குமூலம் பொய்யானதா? பரவும் போலியான செய்தி

Report Print Deepthi Deepthi in இந்தியா

இந்தியா வந்துள்ள விமானி அபிநந்தன் இரண்டாவது நாளாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் பாகிஸ்தான் நாட்டில் வாக்குமூலம் அளித்தாக போலியான செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

அபிநந்தன் வாக்குமூலம் அளித்ததாக நேற்று செய்தி வெளியானது. அதாவது, பாகிஸ்தான் இராணுவம் தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாகவும், இந்தியா தொடர்பான முக்கிய ஆவணங்களை கேட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், பிரதமர் குறித்தும் என்னிடம் கேள்வி எழுப்பினர், இருப்பினும் நான் பதில் அளிக்க மறுத்துவிட்டேன் என கூறியிருந்தார்.

எனினும், இந்த செய்தி போலியானது என கூறப்படுகிறது. அபிநந்தன் வாக்குமூலம் அளித்தாக கூறப்படும் செய்தி அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்