ஒரு போரின் வலி தெரியுமா? போர் பைத்தியம் பிடித்திருந்தால் அங்கு செல்லுங்கள்: இறந்துபோன வீரரின் மனைவி உருக்கம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஜம்மு காஷ்மீரில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த விமான விபத்தில் விமானப்படையை சேர்ந்த வீரர் மாதவ்கானே உயிழந்தார்.

இவரது உடல் 21 குண்டுகள் முழுங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் உயிரிழந்த இராணுவ வீரரின் ம்னைவி அளித்துள்ள பேட்டியில், சமூகவலைதளங்களில் போர் போர் என்று கூச்சலிட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு அதன் வலி தெரியுமா? அப்படி உங்களுக்கு போர் பைத்தியம் பிடித்திருந்தால் எல்லைக்கு செல்லுங்கள், ஒரு போரின் வலி என்ன என்பது தெரியும்,

எந்த நேரத்திலும் நாங்கள் போரை விரும்பவில்லை என உருக்கமாக கூறியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் பிரச்சன் நடந்தபோது சமூகவலைதளங்களில் போர் வெடிக்கலாம் என கருத்துக்கள் அதிகம் நிலவியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்