இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மை..பதிலடி கொடுப்போம்! மசூத் அசாரின் சகோதரன் ஆவேசமாக பேசிய ஆடியோ

Report Print Santhan in இந்தியா

தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது உண்மை தான் என்று தீவிரவாதி மசூத் அசாரின் சகோதரன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் புல்மாவா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட துணை இராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு எதிராக இந்தியாவில் கொந்தளிப்பு மனநிலை ஏற்பட்டது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே அதிகரித்தது.

இதனால் கடந்த 26-ஆம் திகதி பாகிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை சரமாரியாக குண்டுகளை வீசின. இந்தத் தாக்குதலில் பயங்கவாத முகாமில் இருந்த சுமார் 300-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்தது. ஆளில்லாத காட்டில்தான் இந்தியா குண்டு வீசியதாகக் கூறியது.

இந்நிலையில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரன் மவுலானா அமர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், இந்திய விமானப்படை விமானங்கள், காஷ்மீர் இஸ்லாமியர்களுக்கு உதவுதற்காக ஜிகாதி பயிற்சி அளிக்கப்பட்ட மையத்தில் வெடி குண்டுகளை வீசியது.

முகாம் பாதிக்கப்பட்டது உண்மைதான். இந்த தாக்குதலின் மூலம், இந்தியாவுக்கு எதிரான ஜிகாத்தை நாங்கள் தொடங்கி விட்டோம் என்பது உறுதியாகியுள்ளது என்று கூறியுள்ளான்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்