இந்தியாவின் ஹீரோ தமிழன் அபிநந்தன் பெயரை வைத்து சமூகவலைத்தளங்களில் நடக்கும் கூத்து! அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவின் ஹீரோ என்றழைக்கப்படும் அபிநந்தனின் பெயரை வைத்து சமூகவலைத்தளங்களில் போலி ஐடிகள் துவங்கப்பட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய எல்லைக்குள் அத்து மீறிய பாகிஸ்தான் இராணுவத்திற்கு பதிலடி கொடுத்த போது, இந்திய விமானியும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான அபிநந்தன பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார்.

இதனால் பாகிஸ்தான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அவர், நேற்று முன் தினம் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்ட அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை, விசாரணைகள் சென்று கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் இராணுவத்தினர் கண்ணை கட்டி அவரைப் பற்றியும், இந்திய இராணுவத்தைப் பற்றியும் கேட்ட போது அவர் பதில் கூறாமல் இருந்ததால், அவரை இந்திய மக்கள் எங்கள் நாட்டின் ஹீரோ என்று புகழ்ந்து வருகின்றனர்.

இப்படி இந்த சூழ்நிலையில் சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். ஆம் இப்போது சமூகவலைத்தளமான டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றி அபிநந்தன் பெயரில் ஐடிகள் ஓபன் செய்யப்பட்டுள்ளன.

இதனால் இணையவாசிகளும், இது அபிநந்தனின் உண்மையான ஐடி என்று பின்பற்றியுள்ளனர். இப்படி பல ஐடிகள் போலியாக ஓபன் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் மட்டும் அவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்து, அபிநந்தன் என்று தான் குறிப்பிட்டுள்ளது. அதற்குள் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை 2,37,000 பேர் பின்பற்றியுள்ளனர்.

இந்தியாவின் ஹீரோ என்றழைக்கப்படும் அபிநந்தனின் பெயரை வைத்து இப்படி போலித்தனமான செயல்கள், அதன் உண்மை தன்மை தெரியாமல் மக்களும் பின்பற்றி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்