ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு: 2 ராணுவ வீரர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு

Report Print Raju Raju in இந்தியா

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் ஹண்ட்வாரா மற்றும் பாபாகண்ட் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது

இந்த துப்பாக்கி சண்டையில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் 2 பொலிசார் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இன்றோடு தொடர்ந்து மூன்றாவது நாளாக துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்