போரின் போது மயிரிழையில் உயிர் பிழைத்த அபிநந்தனின் தாய்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பாகிஸ்தான் இராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டு இந்திய மக்களின் மனதில் ஹீரோவாக உயர்ந்த தமிழகத்தை சேர்ந்த அபிநந்தனின் தாய் ஷோபாவும் போர் முனைகளில் மிகவும் தைரியமாக பணியாற்றியவர்.

மிகவும் தைரியமான தாய் ஷோபாவுக்கு பிறந்த அபிநந்தனும் மிகவும் தைரியமானவர்.

அபிநந்தனின் தந்தை விமானப்படையில் பணிபுரிந்தவர், தாய் ஷோபா மருத்துவம் படித்துள்ளார்.

லைபீரியா போர், நைஜிரீயா போர், கேத்தி யுத்தம், ஈரான், ஈராக் போர், ஐவரி கோஸ்ட் போர், பப்புவா கினியா நாட்டில் நடைபெற்ற போரின்போது மருத்துவ சேவை புரிந்துள்ளார்.

தனது உயிரை பணயம் வைத்து பலமுறை போர்முனைகளில் பணியாற்றியுள்ளார்.

2-வது வளைகுடா யுத்தம் நடந்தபோதும், போர்முனையில் இருந்தார். அப்போது மயிரிழையில் உயிர் பிழைத்தவர் ஆவார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்