ஒழுகும் ரத்தத்துடன் குப்புற படுக்கவைத்து விசாரிக்கப்பட்ட அபிநந்தன்: பதற வைக்கும் புதிய வீடியோ!

Report Print Vijay Amburore in இந்தியா

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கியபோது, வன்முறையாளர்களால் கொடுமையாக தாக்கப்பட்டு விசாரிக்கப்படும் புதிய வீடியோ காட்சியானது தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 27-ம் திகதி எல்லையில் புகுந்த பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டி சென்றபோது, இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் அந்நாட்டு எல்லையில் சிக்கிக்கொண்டார்.

அப்போது அங்கிருந்த வன்முறையாளர்கள் சிலர், அபிநந்தனை சரமாரியாக தாக்க ஆரம்பித்தனர். இதில் அவருடைய தலைப்பகுதியில் இருந்து அதிகமான ரத்தம் வெளியேற ஆரம்பித்தது.

வீடியோவை காண...

இதற்கிடையில் தகவலறிந்து வந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், அபிநந்தனை மீட்டு உடனடியாக சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர். அன்றைய தினமே தன்னை பாகிஸ்தான் அதிகாரிகள் நன்கு கவனித்துக்கொள்வதாக அபிநந்தன் பேசும் வீடியோ காட்சியும் வெளியானது.

இந்த சம்பவமானது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று பத்திரமாக இந்திய அதிகாரிகளிடம் வாகா எல்லையில் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் அபிநந்தன் தாக்கப்பட்ட சில நிமிடங்களில் ரத்தம் ஒழுக, குப்புற படுக்க வைத்து விசாரிக்கப்படும் வீடியோ காட்சியானது இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்