பாகிஸ்தான் நாட்டை கதறவிட்ட இந்தியாவின் வான்வழி தாக்குதல்கள்: ஒரு தொகுப்பு

Report Print Arbin Arbin in இந்தியா

பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக இந்திய விமானப்படை இதுவரை மேற்கொண்ட வான்வழி தாக்குதல்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் திகதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர்.

இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய ராணுவம் வீசியுள்ளது.

இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த காலங்களில் இந்தியாவின் விமானப்படை மேற்கொண்ட தாக்குதல்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

1965 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போர்:

1965ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. இந்தப் போரில் இந்திய விமானப்படை அதன் சிறப்பான செயல்பாட்டால் பாகிஸ்தான் விமான படைகளுக்கு தகுந்த பதிலடியை கொடுத்தது.

இந்தத் தாக்குதலில் இந்தியா சார்பில் ரஷ்யாவில் இருந்து பெறப்பட்ட MiG-21 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இதுதான் இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற முதல் வான்வழி போர்.

1971 ஆம் ஆண்டு வங்கதேச போர்:

1971 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து 4 இளம் விமானிகள் இந்திய வான் எல்லையை கடந்து சென்று தாக்குதல் நடத்தினர்.

இவர்கள் பாகிஸ்தானின் முரிட் விமான தளத்தை தாக்கச் சென்றனர். இந்த தாக்குதலுக்கு மிராஜ் ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் F-86 ரக விமானங்கள் தாக்கப்பட்டன. முதல் முறையாக பாகிஸ்தானின் வான்வெளியில் அத்துமீறி நுழைந்து இந்தியா விமானங்கள் தாக்குதல் நடத்தியது குறிப்படத்தக்கது.

1999 கார்கில் போர்:

1999 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடைபெற்றது. இந்தப் போரில் இந்திய விமானப்படை ‘Operation Safed Sagar(White sea)’ என்ற ஆபிரேஷ்னை நடத்தியது.

இதில் MiG-27,MiG-21,மிராஜ்-2000 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த விமானங்கள் அனைத்தும் இந்திய எல்லையிலிருந்து கொண்டே பாகிஸ்தான் படைகள் மீது மிகப் பெரிய தாக்குதலை நடத்தின.

இந்த தாக்குதலில் இந்தியா விமானப்படையின் பலம் பாகிஸ்தானின் விமானப்படையைவிட பல மடங்கு அதிகமாக இருந்தது. இதனால் கார்கில் போரில் இந்தியா வெற்றிப் பெற இது முக்கியமான ஒன்றாக அமைந்தது.

இத்தகைய தாக்குதல்களுக்குப் பிறகு தற்போது இந்திய விமானப்படை மற்றொரு துல்லியமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்