இந்தியா தாக்குதல் நடத்தியது இதற்கு தான்.. இது வெறும் நாடகம்... தமிழக பிரபலத்தின் அதிரடி பேட்டி

Report Print Raju Raju in இந்தியா

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல் என்பது தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம் என திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் முகாமானது முற்றிலும் அழிக்கப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய மே 17 இயக்கத்தின் நிறுவனரும் சமூக ஆர்வலருமான திருமுருகன் காந்தி, இந்த தாக்குதல் என்பது தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம்.

உண்மையில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை செய்திருந்தால் அந்த ஆதாரத்தை ஐ.நாவில் வைத்து பொருளாதார தடையை கொண்டு வரவேண்டும்.

அப்படி செய்யாமல் பாகிஸ்தானில் ஆளே இல்லாத பகுதியில் சென்று குண்டு போட்டு வருவது சினிமாத்தனமான வேலையாகும்.

காஷ்மீர் மக்கள் மீது உண்மையில் அக்கறை இருந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இது தேர்தலுக்காக பா.ஜ.க நடத்தும் நாடகம் என கூறியுள்ளார்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்